பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகள்டன் கலந்து கொண்டு பேசி ஆலோசனை நடத்துவது நிதியமைச்சரின் வழக்கமாகும். அதன்படி பட்ஜெட் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

வேளாண்மை துறை பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல். உள் கட்டமைப்பு, பருவநிலை மாற்றம் ஆகிய அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனை நடைபெற இருக்கிறது. இம்மாதம் 28ஆம் தேதி வரை பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை நடத்திட மத்திய நிதி அமைச்சகம் முடிவு எடுத்து இருக்கிறது.