தமிழகத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது . இதனால் இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வட தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட்டும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .