செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷால். அதைத்தொடர்ந்து தன் இரண்டவது படமான சண்டக்கோழி படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ என்ற பெயரைப்பெற்றார் விஷால். அதைத்தொடர்ந்து பல ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த விஷால் தற்போது லத்தி ,மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகர் விஷாலின் வீடு மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விஷால் சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இவர் வீட்டருகில் காரில் வந்த சில மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதனையடுத்து விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை அண்ணா நகரில் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினர்.அதற்கு ஆதாரமாக எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும், இந்த புகாரில் இணைத்துள்ளோம்.

எனவே இந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்து போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது