சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தீடிரென உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானாவில் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளார். பின்னர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி அவரது மகன் அகிலேஷ் யாதவிடம் கேட்டறிந்த பொது தொடர்ந்து முலாய் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் காக்கும் மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாயம் சிங் யாதவ் குருகிராம் மருத்துவமனையில் காலமானார். முலாம்யம்சிங் யாதவ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் , கட்சி தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.