விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். ‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த விழாவை இரண்டு இடங்களில் நடத்த தயாரிப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘வாரிசு’ படத்தின் இசையமைப்பாளர் தமன் ‘பேன் கானா அறிவிப்பு’ என்று பதிவிட்டுள்ளார்.
#PanGanna Announcement today 💃💥💥💥
— thaman S (@MusicThaman) October 13, 2022
இந்நிலையில் பீஸ்ட் படத்திற்க்கு இசை வெளியீட்டு விழா நடக்காத நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழா நடப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.