தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கி இருக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா , சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சரத்திரங்கள் நடித்துள்ளனர். வரும் 17ம் தேதி இப்படம் வெளியாகும் நிலையில் , படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வாத்தி ட்ரெய்லரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே இளையராஜா இசையமைக்க நடிகர் தனுஷ் பாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் டிரண்டு செய்து கொண்டாடி வருகின்றனர்.
