Skygain News

ரசிகர்கள் எதிர்பார்த்த வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரைலர் வெளியானது..!

தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகியுள்ள வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ஆரம்பத்தில் நாய் சேகர் என டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான படத்திற்கு இதே பெயர் தலைப்பாக வைக்கப்பட்டதால், வடிவேலு படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டது.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும் சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இந்தப்படத்தின் அதகளமான டிரெய்லர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்தப்படத்தில் நாய் கடத்தும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

அவருடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் காமெடியில் கலக்கியுள்ளனர். நகைச்சுவை மட்டுமல்லாமல் ஆக்ஷன் காட்சிகளும் இந்தப்படத்தில் இடம்பெற்றிருக்கும் என்பது டிரெய்லரில் தெரிகிறது.தற்போது இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More