ராபர்ட் மாஸ்டருக்கு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அவரின் முன்னாள் காதலியான வனிதா விஜயகுமார் தான். ஆனால் அதை அவர் பிக் பாஸ் வீட்டில் சொல்லவே இல்லை. இதை பார்த்து உண்மை தெரிந்தவர்கள் எல்லாம் ராபர்ட் மாஸ்டரை திட்டினார்கள்.
இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் வனிதா.அவர் கூறியதாவது ,பிக் பாஸ் வீட்டிற்கு நீ போனால் நல்லா இருக்கும்னு நிறைய பேர் சொல்றாங்க, நீ என்னை நினைக்கிற என்று என்னிடம் கேட்டார் ராபர்ட். கண்டிப்பா போ என்றேன். நீ பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேச முடியுமா என்று கேட்டார்.
நான் விஜய் டிவியில பேசி, பிரதீப்பிடம் பேசினேன். நான் பிக் பாஸ் வீட்டிற்கு போய் அனைவரிடமும் உன்னை பத்தி பேசுவேனு ராபர்ட் சொன்னதை நம்பினேன் என்றார் வனிதா.வனிதாவால் தான் இந்த மேடையில நிற்கிறேன் என்று கமல் சார் முன்பே சொல்வேன் என்றான். வாய்ப்பு மட்டும் அல்ல சம்பளம் வரைக்கும் நான் ஹெல்ப் செய்தேன்.

பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன்பு திடீர்னு என்னிடம் போட்டான் பாருங்க ஒரு பிட்டு. நான் ஏன் உன்னை பத்தி பேசணும்னு கேட்டான். ஏவி பார்த்து டென்ஷன் ஆயிட்டேன். அதில் ராபர்ட் பேசியது ஏமாற்றமாக இருந்தது என்று வனிதா கூறினார்