விஜய் தற்போது வம்சியின் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடிப்பதாகவும், இப்படம் விஜய் படங்களிலிருந்து சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் ‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளியன்று ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக இணையத்தில் செய்திகள் கசிந்தது. தற்போது இந்த தகவலை படத்தின் இசையமைப்பாளர் தமன் உறுதி செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தீபாவளி என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து தான் என உறுதியாக நம்புகின்றனர் ரசிகர்கள்.