விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியான நிலையில் அடுத்ததாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் பாடல் வெளியாக இருக்கின்றது.
மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் இடம்பெற்றது தான் இந்த ஆல்தோட்ட பூபதி பாடல். மணிசர்மா இசையில் வெளியான இப்பாடல் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கின்றது.
இந்நிலையில் தமன் மணிஷர்மாவின் மாணவர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றது.ஆனால் இத்தகவலில் எந்தளவிற்கு உண்மை இருக்கின்றது என்பது தெரியவில்லை