தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலரும் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவருமான வேலூர் இப்ராஹிம் இன்று தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் வழியில் அம்மனை தரிசனம் செய்ய வந்த வேலூர் இப்ராஹிம் அம்மன் முன்பாக நீண்ட நேரம் தரிசனம் செய்தார். பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், சிறப்பான ஆட்சி தந்து வரும் பிரதமர் மோடியின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்றும் வேண்டி கொண்டதாக அவர் தெரிவித்தார்.