தமிழ் சினிமாவில் கலகலப்பான படங்களை இயக்கி பிரபலமானவர் வெங்கட் பிரபு. தன் முதல் படமான சென்னை 28 படத்தின் மூலம் தனக்கென தனி பாதையை உருவாக்கி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கினார் வெங்கட் பிரபு. அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சரோஜா, கோவா ஆகிய படங்கள் வெற்றிபெற இவருக்கு அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது.
இப்படம் வெளியான பிறகு வெங்கட் பிரபு மற்றும் அஜித் அடுத்தகட்டத்துக்கு சென்றனர். அந்த அளவிற்கு மெகாஹிட் வெற்றியை பதிவு செய்தது மங்காத்தா. இந்நிலையில் அப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு அஜித் மற்றும் விஜய்யை ஒரே படத்தில் இயக்க ஆசையாக இருக்கின்றது என கூறினார்.
மேலும் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் வெங்கட் பிரபு.இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் அஜித் மற்றும் விஜய்யை எப்போது இயக்கப்போகின்றீர்கள் என கேட்டு வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் வழக்கம் போல மங்காத்தா 2 பற்றி பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது , எனக்கும் அவர்கள் இருவரையும் இணைத்து திரையில் காட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இருக்கும்போதே அதை அவர்களிடம் கூறி இருக்கிறேன். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது.”அது எப்போது நிறைவேறும் என்பதற்காக நான் ஆசையுடன் காத்திருக்கிறேன். அவர்கள ஒப்புக்கொண்டால் பெருசா மங்காத்தா 2 எடுத்துவிடலாம்” என வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.