Skygain News

மேலும் ஒரு முன்னணி ஹீரோவின் படத்தை கைப்பற்றிய உதயநிதி…வெளியான அறிவிப்பு..!

சமீபகாலமாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பல முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி தமிழ்நாட்டில் வெளியிட்டு வருகின்றது. ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களின் தமிழ்நாடு உரிமையை கைப்பற்றி வருகின்றார் உதயநிதி.

முன்னணி நடிகர்களின் படங்களை தவிர்த்து மேலும் பல ஹீரோக்களின் படங்களையும் வாங்கி வருகின்றார். சமீபத்தில் அமீர் கான் படத்தையும் வாங்கி வெளியிட்டார் உதயநிதி. ஹிந்தி படத்தை உதயநிதி வாங்கியதால் சில சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் விடுதலை படத்தையும் வாங்கியுள்ளார் உதயநிதி.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் அசுரன் படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இளையராஜா இசையில் உருவாகும் இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.