Skygain News

ஒருவழியாக முடிந்த விடுதலை..வாடிவாசலுக்கு விடிவுகாலம் பிறக்குமா ?

தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இதுவரை தோல்வியே கண்டிராத வெற்றிமாறன் தற்போது விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி போராளியாகவும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இளையராஜா இசையில் உருவாகும் இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது.

இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை பிரபல நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் முக்கியமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்த படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More