நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 4 மாதங்களில் இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. வாடகைத் தாய் முறையில் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.
தற்போது நடிப்புக்கு ரெஸ்ட் விட்டு குழந்தைகளை கவனித்து வருகிறார் நயன்.இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவை பற்றி விக்னேஷ் சிவனின் தாய் கூறிய விஷயம் செம வைரலாக போய்க்கொண்டிருக்கின்றது. அதாவது நயன்தாராவின் வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணிற்கு நயன்தாரா செய்த உதவியை பற்றி தான் அவரது மாமியார் கூறியுள்ளார்.

அவர் வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண் ஒரு நாள் சோகமாக அமர்ந்திருந்தாராம். அதைப்பற்றி விசாரித்த நயன்தாராவிற்கு அந்த பெண்ணிற்கு நான்கு லட்சம் கடனிருப்பது தெரியவந்ததும் உடனே நான்கு லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து கடனை அடைக்க சொன்னாராம் நயன்தாரா. இந்த விஷயத்தை விக்னேஷ் சிவனின் தாய் ஒரு வீடியோவில் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது