Skygain News

விஜய்யுடன் மோதலுக்கு தயாரான அஜித்…இனி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது..!

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக பார்க்கப்படும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். என்னதான் இவர்களுக்குள் நட்பு இருந்தாலும் ரசிகர்களால் இவர்கள் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

சமகாலகட்டங்களில் அறிமுகமான இவர்களின் திரைப்பயணம் ஒரே சாயலில் இருந்துள்ளது. ஆரம்பத்தில் போராட்டம், பின்பு காதல் படங்கள், மெல்ல மெல்ல ஆக்ஷன் படங்கள் என இருவரும் ஒரே கோட்டில் தான் பயணித்து வந்தனர்.

எனவே தான் தலையா ? தளபதியா ? என்ற போட்டி ரசிகர்களிடையே நிலவி வருகின்றது. நாளுக்கு நாள் இவர்கள் ரசிகர்களின் மோதல்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன.

இந்த சூழலில் விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித்தின் AK 61 திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவதாக தெரிகின்றது. இதன் மூலம் இவர்கள் திரைப்படங்கள் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

கடைசியாக 2014 ஆம் ஆண்டு வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது. அதன் பிறகு தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் AK61 மற்றும் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்த செய்தியினால் தற்போது ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More