தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மேலும் தீபாவளிக்கு இப்படத்தின் ஏதாவது அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அன்று வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என அப்படத்தின் இசையமைப்பாளரே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்து வந்தன. இதன் காரணமாக படக்குழு மிகவும் கண்டிப்பான முறையில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்து படப்பிடிப்பை நடத்தியது.

இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு இப்படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி இணையத்தில் லீக்கானது. இதன் காரணமாக விஜய் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளானாராம். மேலும் இன்று வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அனைவரது முன்பும் விஜய் தன் கோபத்தை காட்டியதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இது உண்மையான தகவலா இல்லை வதந்தியா என்பது தெரியவில்லை