தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி என்ற ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பிரபலமானார் விஜய் தேவரகொண்டா. அதன் பிறகு கீதா கோவிந்தம், டியர் காம்ராட் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார்.
இவரின் படங்கள் தமிழ்நாட்டிலும் அதிகாலை 5 மணி காட்சி திரையிடப்பட்டு வருகின்றது. அந்த அளவிற்கு விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா படமாக கடந்த வாரம் உலகமெங்கும் ‘லைகர்’ படம் வெளியாகியுள்ளது.
இந்தப்படம் வெளியானதில் இருந்து நெகட்டிவ் விமர்சனங்களே வருகிறது. இந்தப்படம் வெளியாவதற்கு முன்பாகவே கிளம்பிய எதிர்ப்பு குறித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டபோது, அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அலட்சியமாக யார் புறக்கணிக்க போகிறார்கள் பார்க்கலாம். படத்தை பார்க்க விரும்புபவர்கள் வந்து பார்க்கட்டும் என்பது போன்று பேசினார்.
இவரது பேச்சு சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் ‘லைகர்’ படம் வெளியானதை தொடர்ந்து கிளம்பிய நெகட்டிவ் விமர்சனம் குறித்து மும்பையில் உள்ள பிரபல மராத்தா மந்திர் சினிமா என்கிற தியேட்டரின் உரிமையாளரான மனோஜ் தேசாய் என்பவர் விஜய்தேவரகொண்டாவின் அலட்சியமான பேச்சும் ஆணவப்போக்கும் காரணமாகவே இந்த படம் ஹிந்தியில் தோல்வியை தழுவியுள்ளது என்று காட்டமாக விமர்சித்தார்.
இந்தநிலையில் படத்தின் ரிசல்ட் குறித்து அப்செட்டில் இருக்கும் விஜய் தேவரகொண்டா, ஒரு மிகப்பெரிய தியேட்டர் அதிபர் இப்படி சாபம் கொடுப்பது போன்று பேசியதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மும்பைக்கு கிளம்பி சென்ற அவர் சம்பந்தப்பட்ட தியேட்டர் அதிபரை நேரிலேயே சந்தித்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் நான் அலட்சியமாக பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.தற்போது விஜயதேவரகொண்டா அவர் மும்பை சென்று திரையரங்க உரிமையாளரை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது
Manoj Desai was all praise for #VijayDevarakonda, stating, “He is a really very nice guy, down to earth, I will keep loving him always. He has got a bright future and I promise hereby, I will take all his pictures. I wish him all the best”@TheDeverakonda pic.twitter.com/QHYat52A2g
— Ashwani kumar (@BorntobeAshwani) August 28, 2022