Skygain News

படுதோல்வி அடைந்த லைகர்..சம்பளமே வேண்டாம் என்ற விஜய் தேவரகொண்டா..!

அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பிரபலமான நடிகரானார் விஜய் தேவரகொண்டா. அதன் பின் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார் விஜய் தேவரகொண்டா. அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. எனவே மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவான லைகர் படத்தை மிகவும் நம்பியிருந்தார் விஜய் தேவரகொண்டா.

சில நாட்களுக்கு முன்பு வெளியான லைகர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய இந்த படம் MMA வீரர் குறித்தான கதைக்களமாகும். இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதில் அனன்யா பாண்டே , ரம்யா கிருஷ்ணா மற்றும் ரோனித் ராய் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். மேலும் விஜய் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

முன்னதாக இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் கண்ட வெற்றியை கூட படம் பெறவில்லை மிகப்பெரிய தோல்வியை சந்தித்த லைகர் படத்தால் அதன் தயாரிப்பு நிறுவனம் துவண்டு போனது. இந்நிலையில் அவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக தனது சம்பளத்தில் இருந்தது 6 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து விட்டாராம் விஜய் தேவரகொண்டா. முன்னதாக இவரது சம்பளம் 20 கோடி என செய்தி வெளியாகி இருந்தது. அதோடு அடுத்த படத்திற்கு சம்பளமே பெறாமல் நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம் நாயகன்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More