தெலுங்கு சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி என்ற ஒரு படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமான விஜய் தேவரகொண்டா தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
ஆனால் அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் துபாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தார் நடிகர் விஜய் தேவரகொண்டா. போட்டி துவங்கும் முன்பு விஜய் தேவரகொண்டா கூறியதாவது,நான் விராட் கோஹ்லியின் ரசிகன். அவர் இந்த போட்டியில் குறைந்தது 50 ரன்களாவது அடிப்பார் என்றார்.எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, கோஹ்லியாக நடிக்க விரும்புதாக தெரிவித்தார்.