தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் தன் நடிப்பு திறனுக்கு தீனிபோடும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடித்து வருகின்றார் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் என பல ரோல்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் கைவசம் பல படங்கள் இருக்கின்றன.
மேலும் தற்போது ஷாருக்கான் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார் விஜய் சேதுபதி.இந்நிலையில் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதே போல அவரது மேடை பேச்சுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
பார்ப்பவர்களுக்கு உத்வேகம் தரக்கூடிய அவரின் பேச்சு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதே போல தற்போது கல்லூரி ஒன்றில் விஜய் சேதுபதி பேசிய பேச்சு செம வைரலாகி வருகின்றது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து அறிவுரை கூறிய விஜய் சேதுபதி ஒரு திருக்குறள் ஒன்றை கூறினார்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

என்ற திருக்குறளை அவர் கூறினார்.இக்குறளில் தலை என முடிவதை கேட்ட மாணவர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, இப்போ ஏன் சத்தம் போடுறீங்க, நாம என்ன பேசிகிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க என சற்று காட்டமாக பேசினார்.