விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை வம்சி இயக்க நாயகியாக ராஷ்மிகா நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் மிகப்பிரமாண்டமாக வெளியாக இருக்கின்றது.இந்நிலையில் தற்போது விஜய் கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் செபட கியூட்டான புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
மேலும் அந்த குழந்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தையாம்.இந்த வாரிசு திரைப்படத்தை தயாரிப்பவர் தில் ராஜு. இவருடைய முதல் மனைவி மாரடைப்பால் உயிரிழக்க 2020ல் வியாகா என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2022 வருட ஆரம்பத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
#ThalapathyVijay with #DilRaju's Child pic.twitter.com/Wqei1s4UJS
— 𝐁𝐡𝐞𝐞𝐬𝐡𝐦𝐚 𝐓𝐚𝐥𝐤𝐬 (@BheeshmaTalks) October 31, 2022
தற்போது அவருடைய மகனை கையில் தூக்கி வைத்துக்கொண்டு விஜய் வாரிசு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.22222e