தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார் விஜய்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகின்றார்.
இப்படத்தின் முதல் பாடல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகின்றது.இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர்கள் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது வந்த ஒரு தகவலினால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். அதாவது விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகின்றார்.

ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றார்.மேலும் இப்படத்தில் தீபிகா படுகோன் கெஸ்ட் ரோலில் நடப்பதாக செய்திகள் வந்தன. இதையடுத்து விஜய்யும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது விஜய் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை என்ற செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது