தளபதி விஜய், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்.. நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
தற்போது இப்படத்திலிருந்து ரஞ்சிதமே எனும் பாடல் வெளியாகியுள்ளது.நேற்று வெளியான இப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இப்பாடலில் விஜய்யின் நடனம் ஹைலைட்டாக இருக்கின்றது.
இந்நிலையில் என்னதான் இப்பாடலுக்கு அமோகமான வரவேற்பு இருந்து வந்தாலும் மறுபக்கம் சில ட்ரோல்களுக்கும் ஆளாகி வருகின்றது.
Vaarisu First single track 😍😍 pic.twitter.com/BeJCsb6f4t
— மதுர பாய் 👶 (@maduraiboy0007) November 5, 2022
அதாவது ரஞ்சிதமே எனும் பாடல் கண் திறந்து பாரம்மா என்ற படத்தில் இடம்பெற்ற, அம்மான்னு எல்லாருக்கும் சொல்லிவெச்ச பாடலின் காப்பிதான் ரஞ்சிதமே என சில ரசிகர்கள் ட்ரோல்ல செய்து வருகின்றனர்.