Skygain News

என்ன தளபதி 67 படத்திற்காக விஜய் சம்பளம் வாங்கவில்லையா ?

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தை இயக்கி வெற்றி கண்டார். இந்நிலையில் இதையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் தளபதி 67 படத்தின் மூலம் இணையவுள்ளனர்.

தற்போது இப்படத்தின் முந்தைய பணிகளில் பிசியாக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்தாண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நடிகர் விஜய் சுமார் ரூ. 130 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தளபதி 67 படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சம்பளமாக எதுவும் வாங்கவில்லையாம்.

அதற்க்கு பதிலாக படத்தின் பிஸ்னஸ் வசூலில் இருந்து ஷேர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 படத்திற்காக விஜய் இப்படியொரு விஷயத்தை செய்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More