Skygain News

தளபதி 67 படத்தில் லோகேஷுடன் இணைந்த இயக்குனர்..வெறித்தனமான சம்பவம் லோடிங்..!

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. ராஷ்மிகா, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது.

எமோஷனல் கலந்த குடும்ப படமாக உருவாகும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். கமலின் விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் விஜய்யுடன் இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.

ஆனால் இப்படத்தை பற்றி தற்போது வரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே தான் இப்படத்தின் அறிவிப்பு வரும் என்று தெரிகின்றது. அதேசமயம் லோகேஷ் கனகராஜ் கதை விவாதத்தில் இயக்குனர் ரத்னகுமாருடன் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் கதை விவாதத்தில் ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கிய தீரஜ் வைத்தி இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகத்தளங்களில் செம வைரலாக பரவி வருகின்றது. எனவே இதனை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் ,ரத்னகுமாருடன் இணைந்து தீரஜ் வைத்தியும் தளபதி 67 கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பேசி வருகின்றனர். ஆனால் இதனைப்பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More