Skygain News

தளபதி 67 படத்தில் இணைந்த பிரபலம்..வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கின்றார்.மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

‘மாஸ்டர்’ படத்தில் விமர்சனரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரிகட்ட போவதாகவும், இந்தப்படம் ழுழுக்க தன்னுடைய பாணியில் இருக்க போவதாகவும் லோகேஷ் பேட்டிகளில் கூறி வருகிறார்.

மேலும் இந்தப்படத்தில் விஜய் நாற்பது வயதான கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணியில் லோகேஷ் பிசியாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தப்படத்தில் இணைந்துள்ள காஸ்டியூம் டிசைனர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கைதி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிய பிரவீன் ‘தளபதி 67’ படத்தில் கமிட்டாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More