வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் பிசியாக நடித்து வருகின்றார் தளபதி விஜய். கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. எனவே தான் தற்போது நடித்து வரும் வாரிசு படத்திற்கு எந்த வித எதிர்மறை விமர்சனங்களும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கவனமாக இருந்து வருகின்றார் விஜய்.
மேலும் இப்படத்தில் விஜய் சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதையடுத்து விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கின்றார். விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் விஜய்யுடன் இணைவதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ளதாகவும், விஜய் ஐம்பது வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டராக நடிப்பதாகவும் தகவல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து இப்படம் பாடல்கள் இல்லாமல் உருவாகவுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் நடிகை சமந்தா நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து த்ரிஷா தளபதி 67 படத்தில் விஜய்யின் மனைவியாக நடிப்பதாகவும் தகவல்கள் வந்தன.
ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய்யுடன் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி 67 படத்தில் வித்யாசமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை இருக்கின்றது என்பது தெரியவில்லை.