விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஒரு எமோஷனல் படமாக வாரிசு திரைப்படம் உருவாகின்றது. விஜய்யின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்களை போன்று இப்படமும் விஜய்யை சற்று மாறுபட்ட கோணத்தில் காட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு வாரிசு படத்தை திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கின்றார். இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியும், லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதாலும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு அக்டோபர் மாதம் துவங்கும் என சொல்லப்பட்ட தளபதி 67 தற்போது டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது.
இருப்பினும் கண்டிப்பாக டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.