Skygain News

இன்னும் அறிவிப்பே வரல..அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா ? தெறிக்கவிடும் தளபதி 67 ..!

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜய் ஐம்பது வயதுதக்க கேங்ஸ்டராக நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது. இதையடுத்து இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் பாடல்கள் இல்லாமல், நாயகி இல்லாமல் உருவாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாக தெரிகின்றது.

தற்போது லோகேஷ் இதற்கான நடிகர்களின் தேர்வில் பிசியாக இருக்கின்றார்.இந்நிலையில், பூஜை கூட போடாத இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் ரூ. 160 கோடிக்கு தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது மிகப்பெரிய சாதனை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.