Skygain News

தளபதி 68 இயக்குனர் இவர்தான்..மீண்டும் இணையும் மெகாஹிட் கூட்டணி..!

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதையடுத்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கவுள்ளது.இந்நிலையில் வாரிசு படமே இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது தளபதி 68 படத்தைப்பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது தளபதி 68 படத்திற்காக விஜய் மீண்டும் அட்லீயுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.மேலும் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் விஜய்யின் தளபதி 68 படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஷாருக்கானின் ஜவான் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அட்லீ. இப்படத்தை முடித்த பின்னர் தான் தளபதி 68 படத்துக்கான பணிகளை தொடங்க இருக்கிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு இறுதியில் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய்யும் அட்லீயும் நான்காவது முறையாக இணைய உள்ளனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More