விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளன.
இதனால் இந்த சீசன் எப்படி இருக்கும் என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீடு கிளப் ஹவுஸ் ஆக மாறியது.
அதன்படி கிச்சன், பாத்ரூம், கிளீனிங், பாத்திரம் கழுவும் அணி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டது. அந்த நான்கு அணிகளும் தங்களது திறமையை நிரூபித்து எந்த அணி சிறந்தது என நிரூபிக்க வேண்டும் என இன்று ஒரு டுவிஸ்டை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி போட்டியாளர்கள் என்ன கேட்டாலும் மற்ற அணியினர் அதனை செய்ய வேண்டும்.
#Day2 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/CakHMoaG7O
— Vijay Television (@vijaytelevision) October 11, 2022
உதாரணத்துக்கு கிளீனிங் அணியில் உள்ளவர் கிச்சன் அணியில் உள்ள ஒருவரை அழைத்து தனக்கு ஊட்டி விட சொல்லலாம். இதில் பாத்ரூம் வருது என ஜிபி முத்து சொன்னதும் சம்மந்தப்பட்ட அணியை சேர்ந்தவர்கள் அவரை அலேக்காக தூக்கிக் கொண்டு செல்லும் காட்சியும் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.மேலும் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஜி.பி.முத்து தான் பிரபலமான போட்டியாளராக வலம் வருகின்ற என்பது குறிப்பிடத்தக்கது