விஜய் மற்றும் வம்சி கூட்டணியில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார் விஜய்.
இந்நிலையில் ராஷ்மிகா நாயகியாக நடித்து வரும் இப்படத்தில் தமன் இசையமைத்து வருகின்றார். நாயகி, இசையமைப்பாளர், இயக்குனர் என பலரும் விஜய்யுடன் இப்படத்தின் மூலம் முதல் முதலாக இணைவதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியான நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இதன் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. என்னவென்றால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் மிகபிராம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பீஸ்ட் படத்திற்க்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் வாரிசு படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக வந்த செய்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.