விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விஜய் படங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும் என்றும், வழக்கமான விஜய் படங்களை போல வாரிசு இருக்காது என்றும் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
எனவே இத்தகவலின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வருவதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து படக்குழு தற்போது பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றது. இந்நிலையில் தமன் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஓப்பனிங் பாடல் பற்றிய சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தின் ஓப்பனிங் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாகவும், அவருடன் சேர்ந்து இசையமைப்பாளர் அனிருத்தும் பாடியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று தர லோக்கலான குத்து பாடலாக இருக்கும் என்றும் தமன் கூறியிருந்தார். மேலும் ஓப்பனிங் பாடல் செம மாஸாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார் தமன் என்பது குறிப்பிடத்தக்கது.