விஜய் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகிவரும் வாரிசு திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியான நிலையில் அடுத்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் இப்படம் வழக்கமான விஜய் படங்களை காட்டிலும் சற்று வித்யாசமாக அதே சமயத்தில் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும் என்று படக்குழுவிடமிருந்து தகவல் வந்தது.
மேலும் இப்படத்தில் தமன் மொத்தம் ஆறு பாடல்களை இசையமைத்துள்ளதாகவும், அனைத்து பாடல்களும் தரமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதையடுத்து தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் முதல் பாடலை பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் பாடி இருக்கின்றனராம்.
இத்தகவலை கேட்ட ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.