‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளியன்று ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் அன்றைய தினமே விஜய்யின் ‘தளபதி 67’ படம் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது லேட்டஸ்ட் தகவலாக ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகாது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ‘வாரிசு’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.