விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிளின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
#VarisuFirstSingle Teaser is Here 🔥❤️@actorvijay Anna 💃#Ranjithame Is Here to Rule your Playlist 🎧🔊😍
— thaman S (@MusicThaman) November 3, 2022
Volume Up 🔊🎧 Speakers On https://t.co/eT5JqifwEv
‘ரஞ்சிதமே’ என துவங்கும் இந்தப்பாடலை விவேக் எழுதியுள்ளார். விஜய் பாடியுள்ள இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தன்னுடைய ஸ்டைலில் செம்ம ஸ்டப் போட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்