விஜய் தற்போது வம்சியின் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை வம்சி இயக்க நாயகியாக ராஷ்மிகா நடிக்கின்றார்.வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ‘ரஞ்சிதமே’ என துவங்கும் இந்தப்பாடலை விவேக் எழுதியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
#Anna the Day I have Been Waiting Since I Became Ur Hugest FAN 🔥
— thaman S (@MusicThaman) November 5, 2022
Neengaa Massss Anna 🖤 @actorvijay
Yengallodda Chinna Musical Sambhavam Ungallukagha Love U dear anna ❤️#Ranjithame #VarisuFirstSingle
Is here 🔊🔥 Volume Up ⬆️ Speakers ON https://t.co/Bwv8VgeVbo
விஜய் பாடியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தன்னுடைய ஸ்டைலில் செம்ம ஸ்டப் போட்டுள்ளதாகவும், யூடிப் டிரெண்டிங்கில் இந்த பாடல் பட்டையை கிளப்ப போகுது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.