ஏற்கனவே தெலுங்கு திரையுலகம் விதித்த கட்டுப்பாடுகளால் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய சிக்கல் விஜய்யை டென்ஷன் ஆக்கியுள்ளது.கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா.
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்தார். கடந்தாண்டு வெளியான புஷ்பா ராஷ்மிகாவுக்கு பெரிய அளவில் கம்பேக் கொடுத்ததால், தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல், அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இதனிடையே, ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு தலை வலியாக அமைந்துள்ளது.கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. அந்தப் படம் கொடுத்த அறிமுகத்தால் தான் ராஷ்மிகாவிற்கு தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து கன்னட திரையுலகை இழிவுப்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பிரபலமான ஆங்கில இதழுக்கு பேட்டி கொடுத்துள்ள ராஷ்மிகா, தான் அறிமுகமான முதல் கன்னட படத்தை யார் தயாரித்தது என தெரியாது என்பதுபோல கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு கன்னட திரையுலகில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாம்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து கன்னட திரையுலகை அவமதித்து வருவதால், அவரது படங்களை கன்னடத்தில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்களாம்.இதனால் வாரிசு படத்திற்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது