விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை வம்சி இயக்க ராஷ்மிகா நாயகியாக நடித்து வருகின்றார்.கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையின் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இதையடுத்து சமீபத்தில் இப்படத்திலிருந்து ரஞ்சிதமே எனும் பாடல் வெளியாகி செம ஹிட்டடித்தது.இப்பாடலை விஜய் பாடியுள்ளார் என்பது தனி சிறப்பாக அமைந்தது.

இதை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் ஸ்பீச்சை மேடையில் காணவும் ஆவலுடன் உள்ளனர்.இந்நிலையில், பிரமாண்டமாக நடக்கவிருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.