நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த ஜூன் மாதமே அறிவித்துவிட்டார்கள். வம்சி இயக்கியுள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து உள்ளார். நேரடி தமிழ் படமாக தயாராகி உள்ள இப்படம் தெலுங்கிலும் வாரிசுடு என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக உள்ளது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாக உள்ளதால் யாருக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்திய பேட்டியில் துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி, இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது வாரிசு படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக வாரிசு படத்துடன் வெளியாகும் தெலுங்கு படங்களுக்கே அங்கு திரையரங்குகள் கிடைக்கும் என்றும், மிகக்குறைவான திரையரங்கங்களே வாரிசு படத்திற்கு கிடைக்கும் என்றும் தெரிகின்றது.என்னதான் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தெலுங்கு திரையுலகை சார்ந்தவர்கள் என்றாலும் வாரிசு ஓரு தமிழ் படம் என்பதால் தெலுங்கு திரையுலகில் முன்னுரிமை தரமாட்டாது. எனவே வாரிசு படத்தின் வெளியீட்டில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தருவது குறிப்பிடத்தக்கது.