Skygain News

வாரிசு படத்திற்கு இயக்குனரால் ஏற்பட்ட சிக்கல்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது. வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகின்றார்.

மேலும் பிரபு, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். ஒரு குடும்ப கதையாக உருவாகும் இப்படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்தின் மூலம் முதல் முதலாக விஜய்யின் படத்திற்க்கு இசையமைக்கிறார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் விஜய் இப்படத்தில் நடித்து வருவதாக வந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யின் படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்களில் ஐந்து அல்லது நான்கு பாடல்கள் தான் இருந்து வருகின்றது. மேலும் ஓப்பனிங் பாடல் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. அந்த குறையெல்லாம் வாரிசு படத்தில் இருக்காது என தமன் கூறியுள்ளார். இப்படத்தில் தரமான ஆறு பாடல்கள் இருப்பதாகவும், மேலும் செம மசான குத்து பாடல் இருக்கும் என்றும் கூறியுள்ளார் தமன்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனைப்பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஆனால் எதிர்பாராத விதமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

ஏனென்றால் இப்படத்தின் இயக்குனர் வம்சிக்கு திடீரென உடல்நலக்குறைப்பு ஏற்பட்டுள்ளதாம். எனவே அவரை மருத்துவர்கள் ஒரு வாரம் ஓய்வில் இருக்க சொல்லியிருப்பதாகவும், இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதனை கேள்வி பட்ட விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More