தில் ராஜு பிரமாண்டமாகத் தயாரிக்கும் வாரிசு படத்தில் வம்ஷி பைடிபள்ளி இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் விஜய்யை சற்று வித்யாசமாக காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வர ரசிகர்கள் வாரிசு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
மேலும் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பார்த்த விஜய்யை வாரிசு படத்தில் பார்க்கலாம் எனவும் சில ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.இந்நிலையில் வாரிசு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
அதில், விஜய்யும், ராஷ்மிகாவும் ஜோடியாக ஆடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. மேலும் ரஞ்சிதமே… ரஞ்சிதமே என தொடங்கும் அந்த பாடல் விஜய்யின் குரலில் இருப்பதால் வாரிசு படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார்.

இப்பாடலைத் தான் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் திருட்டுத்தனமாக அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.இதன் காரணமாக படக்குழு உச்சகட்ட சோகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது