நடிகர் விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ரசிகர்களை சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது அவரைக் காண குவிந்திருந்த ரசிகர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய விஜய், அதன்பின்னர் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இதனிடையில் விஜய் ரசிகர் மன்றத்தின் மாநில நிர்வாகியான பூஸ்ஸி ஆனந்தின் காலில் ரசிகர்கள் சிலர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ இணையத்தில் பரவின.சோசியல் மீடியாவில் வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
விஜய்யின் தளபதி புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து கும்பிடும் மன்ற நிர்வாகிகள்.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 20, 2022
விஜய்யை விட செம கெத்து காட்டினார் என்று ரசிகர்கள் பெருமிதம். pic.twitter.com/epnYqAxbET
இந்நிலையில் தற்போது விஜய், நிர்வாகி பூஸ்ஸி ஆனந்தை அழைத்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற கூடாது என எச்சரித்தாகவும், மற்ற நிர்வாகிகளுக்கு இப்படி காலில் எல்லாம் விழ கூடாது, மக்கள் பணியை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.