Skygain News

சென்னையில் கோலாகலமாக நடைபெற இருக்கும் விக்ரம் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம்..எப்போ தெரியுமா ?

உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் அவரின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.கமல் அரசியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என பிஸியாகிவிட்டதால் இனி அவர் படங்களில் நடிக்கமாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால் அதற்கெல்லாம் விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார் உலகநாயகன்.கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரித்தார். அனிருத் இசையில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் அமோகமான வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

தற்போது இப்படத்தின் 100-வது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார் கமல் . இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.அதாவது , “உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களான கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த வெற்றிவிழாவில், விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளன்று இந்த விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More