சீயான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. எனவே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றார் விக்ரம். மேலும் இப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பிக்கையோடு இருக்கின்றார்.
இந்நிலையில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யலட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அண்மையில் இந்தப்படத்தின் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இந்தப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ட்விட்டர் புரொபைலில் விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும், த்ரிஷா குந்தவை என்றும் பெயரை தங்களின் பெயரை மாற்றியுள்ளனர். இவர்களை பின்பற்றி மற்ற நடிகர், நடிகைகளும் தங்களின் ட்விட்டர் பெயரை மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
