சீயான் விக்ரம் கடைசியாக ஹிட் படம் கொடுத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான இருமுகன் திரைப்படத்திற்கு பிறகு விக்ரமின் படம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. மேலும் மூன்று வருடங்களாக அவரின் படங்கள் திரையில் வெளியாகாமல் இருந்தது.
இதனிடையே சமீபத்தில் OTT யில் வெளியான மஹான் திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியானது கோப்ரா திரைப்படம்.
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. மேலும் வசூலிலும் அடிவாங்கி மிகப்பெரிய தோல்வியை நோக்கி செல்கின்றது கோப்ரா. கோப்ரா படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 21 கோடி வசூலித்துள்ளது.
இந்த வார இறுதியில் ரூ. 25 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான கோப்ரா படத்தின் வசூல் நிலவரம் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. வார இறுதி நாட்களில் கூட படம் பார்க்க தியேட்டருக்கு மக்கள் படையெடுக்கவில்லை.