Skygain News

கோப்ரா படம் எப்படி ? சாதித்ததா ? சோதித்தா ? வெளியான விமர்சனம் இதோ..!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில் இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

படத்தை அதிகாலை காட்சியே பல ரசிகர்கள் பார்க்கத்துவங்கினர். கோப்ரா’ படம் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீசாகி உள்ளது. இந்தப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோப்ரா படத்தின் FDFS பார்த்த ரசிகர்கள் படம் பற்றிய கமெண்ட்களை இணையத்தில் குவித்து வருகின்றனர்.

கணித ஆசிரியரான விக்ரம் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். அவர் யார்? எதற்காக அவரை போலீஸ் தேடுகின்றனர் என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் விதமாக சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது ‘கோப்ரா’. மொத்த படத்தையும் விக்ரம் தாங்கியுள்ளதாகவும், இர்பான் பதான் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சியான் விக்ரம் பல கெட்டப்கள் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார்.

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்கள் போல விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை நகர்த்தியுள்ளார் அஜய் ஞானமுத்து. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மானின் இசை வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 3 மணி நேரம் ஓடும் படத்தின் நீளம் மட்டுமே ‘கோப்ரா’ படத்தின் மைனஸாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.