Skygain News

கோப்ரா படத்திற்கு வந்த விமர்சனங்கள்..படக்குழு அறிவித்த அதிரடி அறிவிப்பு..!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கடந்த சில படங்களாக தோல்வியை சந்தித்து வரும் விக்ரம் இப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றாற்போல படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரும் அமைந்தது.

ஆனால் நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. என்னதான் விக்ரமின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ஸ்வராயசமாக இல்லை என்றும், சலிப்படைய செய்யும் காதல் காட்சிகள் ரசிகர்களை சோதிப்பதாகவும் கருத்துக்கள் வந்தன.

மேலும் அனைத்து விதமான ரசிகர்களும் பொதுவாக சொல்லும் குறை படத்தின் நீளம் தான். கோப்ரா திரைப்படம் மூன்று மணிநேரத்திற்கு மேல் ஓடும் படமாக அமைந்ததால் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்தது. இந்நிலையில் கோப்ரா திரைப்படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் நிறுவனம் கோப்ரா திரைப்படத்தில் முக்கிய மாற்றத்தை செய்திருக்கிறது.

ஆம், கோப்ரா திரைப்படத்தில் 20 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாம். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
மேலும் இன்று மாலை முதலே இந்த அறிவிப்பின் படி கோப்ரா திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.