தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம்.அண்மையில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள 61-வது படத்தை பா.இரஞ்சித் இயக்கவுள்ளார்.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக கடந்தாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் சென்னையில் துவங்கியது.
இந்த பூஜை நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர்கள் விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் இதில் கலந்துகொண்டார். இந்தப்படத்திற்கு ‘மைதானம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக அக்டோபர் 10 ஆம் தேதி, பா. ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் சீயான் 61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.